'அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்..!' - ஓபிஎஸ் உறுதி - admk
சென்னை: "தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்" என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் ஒ. பன்னிர் செல்வம்
சட்டப்பேரவையில் இன்று கடைசி நாள் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று சாதனை படைக்கும். தேனியின் கூட்டைதான் திருட முடியுமே தவிர அதன் கூடு கட்டும் விஞ்ஞான திறமையை யாரும் திருட முடியாது. அப்படித்தான் தேனியில் வெற்றிபெற்றோம். ஆட்சியில் இருக்கும்போதே 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்" என்றார்.
Last Updated : Jul 20, 2019, 4:56 PM IST