எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை , தமிழ்நாடு மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்.
மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த 'திராவிட மாடல்' நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து , வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள் , மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள்’ என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.