தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! - ADMK

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/07-October-2020/9079836_133_9079836_1602047187970.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/07-October-2020/9079836_133_9079836_1602047187970.png

By

Published : Oct 7, 2020, 9:58 AM IST

Updated : Oct 7, 2020, 1:17 PM IST

09:51 October 07

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிகழ்வு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று(அக்.07) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து இன்று காலை தொண்டர்களின் ஆதரவுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது அதிமுக வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,ஜெயக்குமார்,சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோரது  பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.  

இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேஃப் மூவ்?

Last Updated : Oct 7, 2020, 1:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ADMK

ABOUT THE AUTHOR

...view details