தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

27% ஓபிசி ஒதுக்கீடுஅதிமுகவிற்கு கிடைத்த மற்றொரு சாதனை: ஓபிஎஸ், இபிஎஸ் - ADMK statement

2021 - 22ஆம் கல்வியாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 விழுக்காடு ஓபிசி ஒதுக்கீடு அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ்
ஓபிஎஸ் - இபிஎஸ்

By

Published : Jul 30, 2021, 9:13 PM IST

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு முதலே (2021-22) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமுல்படுத்திய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கழகத்தினால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலம்: மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details