தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கம்! - sampangi sacked from admk

சசிகலாவுக்கு அதிமுக கொடி பொருத்திய காரை கொடுத்த அதிமுக ஒன்றியச் செயலாளர் சம்பங்கி உள்ளிட்ட ஏழு பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

AIADMK Sampangi and six sacked from admk
சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கம்!

By

Published : Feb 8, 2021, 10:56 PM IST

சென்னை: சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக ஒன்றியச் செயலாளர் சம்பங்கி உள்ளிட்ட ஏழு பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சம்பங்கி, பி.சந்திரசேகர ரெட்டி என்கிற போகிரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த்குமார், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் இன்று(பிப்.8) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன் - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details