சென்னை: வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதா வகித்து வந்த நிரந்தர பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார்.
அவரது இறப்பிற்கு பிறகு சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். பின் சசிகலா நீக்கப்பட்டு ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் எனவும் எடப்பாடி, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வகித்து வந்தனர். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளராகவும், கே.பி.முனுசாமி துணை பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவிக்கு 4 மாதங்களில் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வகித்த பதவி ரத்து இதையும் படிங்க:அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்!