தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு: கூட்ட நெரிசல் காரணமா? - ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு
ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு

By

Published : Jan 27, 2021, 6:47 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா இன்று (ஜன.27) நடைபெற்றது. இந்த விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்து, கார் மூலம் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வந்தனர்.

இதனால், அங்கு அதிகளவில் கூட்டம் அலைமோதியது. அப்போது, ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள கிளாரியன் ஓட்டல் அருகே பிளாட்பாரத்தில் 75 வயது மதிக்கத்தக்க அதிமுக தொண்டர் ஒருவர் இறந்து கிடப்பதாக மயிலாப்பூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபரின் இடது தாடையில் ரத்த காயம் இருந்துள்ளது.

இதனையடுத்து இறந்த நபர் யார் என்பது குறித்தும், கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது' - ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details