வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற இழுபறியை அஇஅதிமுக கடந்து வந்துள்ள நிலையில், அக்கட்சியின் 49ஆவது தொடக்க விழா இன்று (அக்.17) ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டப்பட்டது.
அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா இவ்விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து, அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அக்கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் இனிப்பு வழங்கினார்.
அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த நிகழ்வில், பொறியியல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 28 பேருக்கு 26 லட்சம் ரூபாய் கல்விக்கான உதவித்தொகையையும் அவர்வழங்கினார்.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு