அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு - அதிமுக தலைமை கழகம்
சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மே 7ஆம் தேதி நடைப்பெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் தலைமைக் கழகத்தில் மே 7 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.