தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் நாளை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம்! - ஒற்றை தலைமை விவகாரம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நாளை அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது
நாளை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது!

By

Published : Jul 16, 2022, 3:07 PM IST

சென்னை:கடந்த ஒரு மாதமாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சத்தை எட்டிய நிலையில் இறுதியாக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் அதிமுகவின் தலைமை அலுவலகம் உள்ள இடங்களில் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால் நாளை தனியார் ஹோட்டலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடுள்ளனர். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை மாற்றம் செய்வது குறித்தும், நாளை மறுநாள்(ஜூலை18) நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் அதிமுகவில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க:ஆபத்தை உணராமல் காட்டு யானையின் அருகே சென்று செல்பி எடுத்த பயணிகள்!!

ABOUT THE AUTHOR

...view details