தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்' - அதிமுக தலைமை கழகம் இரங்கல்! - கனகராஜ் மரணம்

சென்னை: சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இறப்பிற்கு அதிமுக தலைமை கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிமுக தலைமை கழகம்

By

Published : Mar 21, 2019, 6:44 PM IST

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது இறப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் கனகராஜ் இறப்பிற்கு அதிமுக தலைமை கழகம் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், "கோவை புறநகர் மாவட்டம், சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளருமான கனகராஜ், மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்பதை அறிந்து ஆற்ற முடியாத துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தோம். இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் கனகராஜ். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details