தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு! - ADMK announcement

AIADMK MGR general Meeting: அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஜன.19) வட சென்னையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம், ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 1:58 PM IST

சென்னை: நடிகரும், அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (ஜன.19) வட சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழ்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நாளை (ஜன.19) வட சென்னை வடக்கு (கிழக்கு) வட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்றுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 31ஆம் தேதி புதன்கிழமையான அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:DMK Files 3: ஆ.ராசா - ஜாபர் சேட் உரையாடல்.. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details