சென்னைரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் நேற்று (மே.30) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய 145ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்குக் கழிவறை இல்லை, பல அம்மா உணவகங்கள் தற்போது முறையாக செயல்படுத்தப்படவில்லை, மூடப்பட்ட அம்மா உணவகங்கள் எவ்வளவு என கேள்வி எழுப்பினர்.
அப்போது, அம்மா உணவகம் அமைக்கப்பட்டபோது இருந்தே கழிவறை இல்லை என திமுக உறுப்பினர்கள் தெரிவிக்க, அதிமுக உறுப்பினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின், அம்மா உணவகப் பணியாளர்களுக்குக் கழிவறை அமைப்பது தொடர்பாக வசதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா பதில் அளித்தார்.
இதனையடுத்து, மாமன்ற கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக 145ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், "அம்மா (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா) ஆட்சியில் 200 அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுத்தினார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அம்மா உணவகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தினார்.