தமிழ்நாட்டில் காலியாக இருந்த விக்கிராவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதிமுக.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தங்களது வெற்றியை கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும், தெருக்களில் கோஷங்களோடு ஊர்வலமாக சென்றும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,