தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

By

Published : Dec 6, 2021, 2:56 PM IST

சென்னை:அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருவரும் போட்டியின்றித் தேர்வானதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியான நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் பிரதான கட்சியான அஇஅதிமுகவின் உள்கட்சித் தேர்தல் நாளை (டிசம்பர் 7) நடைபெறவுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குப் போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ்

தேர்தல் நாளை நடைபெறும் என்பதால் அதை எதிர்த்து வழக்குத் தொடர இருப்பதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பொறுப்புத் தலைமை நீதிபதி முன்பு முறையீடுசெய்தார்.

அதை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்

ஆனால், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, மனுவே தாக்கல்செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மனு தாக்கல்செய்து, பதிவுத் துறை நடைமுறைகள் முடிந்தால் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ்

இதையும் படிங்க:ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட சென்றவர் மீது தாக்குதல் - 10 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details