சென்னை:இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகியும், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான அண்ணாமலை கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பயிற்சி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உரியதாக இருந்தாலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
படங்களை காட்டி மட்டும் பாடத்தை நடத்துவதைத் தவிர்த்து கொண்டு பாடநூலினை வைத்து பாடம் நடத்த வேண்டும். எழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும். கரும்பலகை பயன்பாடு இருக்க வேண்டும். வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும் என்பது போன்ற மாற்றங்களை எல்லாம் செய்ய வேண்டும்.
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு பாடநூல் பயிற்சி நூல் ஒருங்கிணைப்பு, கீழ்மட்டக் கரும்பலகை செயல்பாடு, செய்தித்தாள் செயல்பாடு, சூழ்நிலையியல் பாட செயல்பாடு ஆகிய செயல்பாடுகளுக்கு லட்சினைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் சூழ்நிலையியல் பாட செயல்பாடு லட்சினையாக (லோகோ) ஓவியத்தின் தலையில் இரட்டை இலையினை தத்ரூபமாக வெளியிட்டிருக்கின்றனர்.