சென்னை: இராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தயாராவது குறித்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மேலும், அதிமுக பொதுக்குழு - செயற்குழு நடத்துவது, புதிய அவைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இதையும் படிங்க:ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லம் அரசுடைமை உத்தரவு செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்