அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில், பேரன்புகொண்ட தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பழம்பெருமையும், இலக்கிய வளமும் நிறைந்த நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் தமிழ் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்ந்துவருகின்றார்கள்.
புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழிமறிக்கும் தடைகளை பால்யாம் தகர்த்து, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் உயர்வடைய, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றும் என்பதை இந்நாளில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், தமிழர் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.