திருவேற்காடு நகராட்சியில் கழிவு சேகரிக்கும் தனியார் கழிவுநீர் டேங்கர் லாரிகள் கழிவுநீரை நீர்நிலைகள், சாலையோரம் என பொது இடங்களில் கொட்டிவந்தனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதாக திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரனுக்கு புகார்கள்வந்தது. இதனையடுத்து திருவேற்காடு ஆணையர் செந்தில் குமரன் , நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
நகராட்சி ஆணையரைத் தாக்க முயன்ற அதிமுக பிரமுகரின் சகோதரர் கைது! - corporation
சென்னை: பொது இடங்களில் கழிவுநீர் கொட்டியதை தட்டிக்கேட்ட திருவேற்காடு நகராட்சி ஆணையரை, தாக்க முயற்சித்த அதிமுக பிரமுகரின் சகோதரரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட கோலடி பகுதியில் ஏரியின் அருகே கழிவுநீர் கொட்டிக்கொண்டிருந்த பதிவு எண் இல்லாத லாரியை கையும் களவுமாக பிடித்த அலுவலர்கள், அந்த வாகனத்தை பறிமுதல்செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த லாரியின் உரிமையாளர் ரவி என்பவர், நகராட்சி ஆணையர் செந்தில் குமரனை தகாத வார்த்தையால் பேசி, தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஆணையர் செந்தில் குமரன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து திருவேற்காடு காவல் துறையினர் ரவியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கழிவுநீர் லாரி உரிமையாளர் ரவி அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் மகேந்திரனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.