சென்னை அருகேராயப்பேட்டை ஜெஹானி ஜெஹான் சாலையில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்குச் சொந்தமான கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்ற அதிமுக பகுதிச்செயலாளர் சீனிவாசன் என்பவர், அதிமுக கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணிக்கடையின் கிளை அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு பிரியாணி கடையின் கிளை மேலாளர் ரூ.1000 அல்லது ரூ.2000 தருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், நீங்கள் தான் முழுச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த அதிமுக பகுதிச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரியாணி கடை மேலாளர், 'நாங்கள் ஏன் முழுச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். முடியாது' எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பகுதிச்செயலாளர் சீனிவாசன், அவரது சகோதரர் விஜயகுமார் உடன் சேர்ந்து எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடை மேலாளரிடம் பணம்பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர்.