தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் பொன்விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக கொண்டாடியது அரசியல் மேசையில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்

By

Published : Oct 17, 2022, 1:06 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தின் மூலம், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அக் 17) அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பிலும், சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் பொன்விழா ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அதேநேரம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் 51வது ஆண்டு விழா கொண்டாடுவதால், சட்டப்பேரவையை ஈபிஎஸ் தரப்பு புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி ஏற்கனவே மூன்று முறை இபிஎஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இதனை ஏற்காத சபாநாயகர், எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தொடர்வார் என்பதை இருக்கையின் மூலம் உறுதி செய்தார். இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சட்டப்பேரவைக்கு வரும் பட்சத்தில் இருவரும் அருகருகே அமர வேண்டிய சூழல் ஏற்படும். இதன் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை முழுமையாக இபிஎஸ் தரப்பு புறக்கணிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் பொன்விழா நிறைவு ஆண்டில் ‘ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்’ என்ற கல்வெட்டு திறப்பு

முன்னதாக கடந்த ஆண்டு சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை கொண்டாடிய சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டை திறந்து வைத்தார். தற்போது அதே இடத்தில் அதிமுகவின் பொன்விழா நிறைவு ஆண்டில் ‘ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்’ என்ற கல்வெட்டை திறந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக சட்டவிதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம் - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details