கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடரும்’ என உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.