தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்ச்சை... சலசலப்பு... அதிமுக பொதுக்குழுவின் பரபரப்பான நிமிடங்கள்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

By

Published : Jun 23, 2022, 7:26 AM IST

Updated : Jun 23, 2022, 5:16 PM IST

13:23 June 23

அதிமுக பொதுக்குழு நிறைவு

சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நிறைவுபெற்றது. 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு , இரங்கல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் , வைத்திலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது

12:49 June 23

பொதுக்குழு உறுப்பினர்களுக்கே முழு அதிகாரம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை என்றும் , இது தொடர்பாக அனைத்து அதிகாரமும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

12:42 June 23

அடுத்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு - கே.பி.முனுசாமி

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி , பொதுக்குழுவில் உள்ள 2700 உறுப்பினர்களில் 2600 உறுப்பினர்கள் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பு செய்து விட்டு , ஒற்றைத் தலைமை தொடர்பாக முடிவெடுக்க வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.

12:34 June 23

ஓபிஎஸ் மீது காகிதம் வீச்சு!

இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என கூறிவிட்டு ஓ.பன்னீர் செல்வம் , வைத்திலிங்கம் வெளியேறிய நிலையில் அங்கிருந்த சிலர் ஓ.பன்னீர் செல்வம் மீது காகிதம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

12:23 June 23

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே - முன்னாள் அமைச்சர் வளர்மதி

முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி , எம்.ஜி.ஆர் படத்தின் பாடலை பாடி ஒற்றைத் தலைமைக்கு ஆதரவான நிலையை வெளிப்படுத்தினார்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

இருட்டுனில் நீதி மறையட்டுமே...

தன்னாலே வெளிவரும் தயங்காதே..

தலைவன் இருக்கிறான் மயங்காதே...

வெகு விரைவில் வருவான் - வளர்மதி

12:17 June 23

கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் - வைத்திலிங்கம் எம்.எல்.ஏ

இன்றைய பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானாது என மேடையில் பேசி விட்டு வெளியேறிய வைத்திலிங்கம் , கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

12:13 June 23

இரட்டை தலைமையால் கட்சிக்கு பின்னடைவு - பொதுக்குழு உறுப்பினர்கள்

முன்னதாக இரட்டை தலைமையால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் , தொண்டர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்

12:10 June 23

சட்டத்திற்கு எதிரான பொதுக்குழு என பேசி விட்டு வெளியேறிய ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை தொடர்பான கோரிக்கை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வைக்கப்பட்ட நிலையில் , சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக பேசி விட்டு ஓ.பன்னீர் செல்வம் , வைத்திலிங்கம் வெளியேறினர்.

12:08 June 23

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம்

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேசினார்.

12:05 June 23

இரட்டை தலைமையை நீக்க அவைத் தலைவரிடம் வலியுறுத்தல்!

இரட்டை தலைமையை நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் கோரிக்கை வைத்தனர்

11:57 June 23

இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு - சி.வி சண்முகம்

இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசினார்

11:52 June 23

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

ஏற்கெனவே தமிழ்மகன் உசேன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த நிலையில் இன்று பொதுக்குழு , செயற்குழு உறுப்பினர்களால் அவர் ஒருமனதாக தேர்வு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

11:47 June 23

அடுத்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் - கே.பி முனுசாமி

அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்

11:42 June 23

ஒற்றை தலைமை வர வேண்டும் - கே.பி.முனுசாமி

அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்து விட்டது; கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டும் என கே.பி.முனுசாமி பேசினார்

11:35 June 23

தீர்மானங்கள் நிராகரிப்பு - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசினார்

11:30 June 23

ஓபிஎஸ் என்ட்ரி.. அண்ணன் எடப்பாடியார் வாழ்க...

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வருகை தந்த போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அண்ணன் எடப்பாடியார் வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பபட்டது.

11:28 June 23

மண்டபத்தில் இடப்பற்றாக்குறை.. வெளியே அமரவைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்..

மண்டபத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 200 பேர் வெளியே அமரவைக்கப்பட்டு, அங்கு எல்சிடி திரை மூலம் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பபட்டது.

11:20 June 23

அதிமுக பொதுக்குழு... எடப்பாடியின் மாஸ் என்ட்ரி...

அதிமுக பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

11:15 June 23

ஈபிஎஸ்சை காத்து இருந்து வரவேற்ற போது...

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சை வரவேற்க மண்டபத்திற்கு வெளியில் காத்திருந்தனர்.

10:56 June 23

ஓபிஆர் என்ட்ரி VS ஈபிஎஸ் வாழ்க முழக்கம்...

மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் ஆகியோர் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு வந்த போது, 'ஈபிஎஸ் வாழ்க' என தொண்டர்கள் எதிர் முழக்கமிட்டனர்.

10:47 June 23

அதிமுக பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு ஓபிஎஸ் வருகை

அதிமுக பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வருகை தந்தார்

10:19 June 23

அதிமுக பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழுவில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் , மூத்த நிர்வாகிகள் , முக்கிய பிரமூகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

10:02 June 23

வானகரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

09:53 June 23

அதிமுக பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டை?

அதிமுக பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டையுடன் பலர் வந்திருப்பதாக தகவல் வெளியானது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் (ஓபிஎஸ் - ஈபிஎஸ்) யார் தரப்பு என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

09:25 June 23

அதிமுக பொதுக்குழு: உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திடவில்லை...

பொதுகுழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை, ஆனால் வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்ட போதும், சில உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

09:22 June 23

அதிமுக பொதுக்குழு: 5 கிமீ அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தால் பூவிருந்தவல்லி முதல் மதுரவாயல் வரை சுமார் 5 கி.மீ அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

09:13 June 23

ஓபிஎஸ் - ஈபிஎஸ் வீட்டில் தனித்தனியே கோ பூஜை

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்படும் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தனித்தனியே அவர்களது இல்லங்களில் கோ பூஜை நடத்தினர்.

08:35 June 23

அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்ட ஓபிஎஸ்.. வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு...

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ஓபிஎஸ்க்கு, அவரது இல்லத்திலிருந்து வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

08:09 June 23

வானகரம் வந்த பொதுக்குழு உறுப்பினர்கள்...

வானகரம் வந்த பொதுக்குழு உறுப்பினர்கள்...

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுக்குழு உறுப்பினர்கள்.

08:08 June 23

எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை...

எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

08:01 June 23

'தீர்ப்பு வழங்கியது எம்ஜிஆர், ஜெயலலிதா தான்' - ஓபிஆர்

"எம்ஜிஆர் ஒரு நீதிபதியாகவும், ஜெயலலிதா மற்றொரு நீதிபதியாகவும் இருந்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்" என ஓ.பி. ரவீந்திரன் தெரிவித்தார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

07:50 June 23

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - ஜெயக்குமார் அதிரடி பேட்டி

நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது.

07:46 June 23

அதிமுக பொதுக்குழு கூட்டம் : அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரண்டாயிரம் போலீஸார்

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வானகரம் திருமண மண்டபம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரண்டாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

07:26 June 23

இனி அதிமுகவில் ஓபிஎஸ்தான் தலைமை - புகழேந்தி

இனி அதிமுகவில் ஓபிஎஸ் தான் தலைமை, அவர் தான் ஒருங்கிணைப்பாளர். காரணமின்றி கட்சியை விட்டு காழ்ப்புணர்ச்சியுடன் ஒருவரை நீக்க நினைத்தவருக்கு விடியும்போது கிடைத்த அடிதான் இந்த தீர்ப்பு என முன்னாள் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

06:45 June 23

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. மேலும், புதிய தீர்மானங்கள் குறித்து விவாதித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன்.23) வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ?.. 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jun 23, 2022, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details