தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? ஓபிஎஸ் பதில் - அண்ணா தொழிற்சங்க பேரவை

அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

By

Published : Nov 25, 2022, 6:47 AM IST

சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வட சென்னை - தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர், மகிழன்பன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அது குறித்து உங்களை (செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்) தான் முதலில் அழைத்து சொல்வேன் எனவும் கூறினார். மேலும் ஆளுநரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, தேவையிருப்பின் ஆளுநரை சந்திப்பேன் என்றார்.

முன்னதாக வட சென்னை - தெற்கு, மேற்கு மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் வில்லியம் அலெக்சாண்டர் அக்கட்சியிலிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமை ஏற்று அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது அதிமுக மாவட்ட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட திருநங்கை அனிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கூறினார்.

அப்போது எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகர், தென் சென்னை - தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அச்சுதன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் குரு மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: விளம்பர பேனர் செலவு குற்றச்சாட்டு: தமிழ்நாடு அரசு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details