தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு வழக்கு; ஈபிஎஸ் தரப்பின் காரசாரமான வாதங்கள்!

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ் தரப்பில் காரசாரமான விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு; ஈபிஎஸ் தரப்பின் காரசாரமான வாதங்கள்!
அதிமுக பொதுக்குழு வழக்கு; ஈபிஎஸ் தரப்பின் காரசாரமான வாதங்கள்!

By

Published : Jul 8, 2022, 4:59 PM IST

சென்னை:அதிமுகவின் அடுத்த பொதுக்குழு வருகிற ஜூலை 11 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 11 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு பதிலளிக்க வேண்டுமென நேற்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் தரப்பில்,

  • 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  • 2,190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஜூலை 11 அன்று பொதுக்கூட்டம் நடத்த ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • தீர்மானங்கள் ரத்து மற்றும் ஒற்றைத்தலைமை குறித்து முன்மொழிய தலைமைக்கழகத்திற்கு உரிமை உள்ளது.
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
  • பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
  • ஜூலை 11 அன்று பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
  • கட்சி விதிகளை திருத்த செயற்குழுவுக்கு அதிகாரமில்லை.
  • செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், அடுத்த பொதுக்குழுவில் முன் வைத்து ஒப்புதல் பெறவும் தீர்மானிக்கப்பட்டது.
  • செயற்குழுவுக்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது.
  • ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை; 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.
  • திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலும் செல்லாது. எனவே இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு கட்சி நிர்வாகிகள் மூலமாகத்தான் சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யபட்டார்.
  • வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் 20% பொதுக் குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும்.
  • பொதுக்குழுவை கூட்ட உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என கட்சி விதி தெரிவிக்கவில்லை.
  • பிரச்னைகள் குறித்து ஓபிஎஸ் பொதுக்குழுவில் தான் விவாதித்திருக்க வேண்டும்; நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது.
  • 15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற கோரிக்கை ஓபிஎஸ்சின் மனுவிலேயே இல்லை.

ஈபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், பொதுக்குழுவிற்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. தீர்மானம் கொண்டு வரவும், நிறைவேற்றவும் அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது.

எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதனை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது. கட்சி நலனுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறும் ஓபிஎஸ், தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details