தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு முடிவுரை - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரை - எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும் வகையில் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

a
a

By

Published : Feb 1, 2023, 7:56 AM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:

"திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் லேபிள் ஒட்டி இவர்கள் ஏதோ கொண்டுவந்ததுபோல செய்துவருகிறார்கள். புது திட்டம் எதுவும் கிடையாது. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது"என கூறினார்.

இதுவரை அதிமுக வேட்பாளர் அறிவிக்கவில்லையே. பாஜகவுக்காக காத்துக்கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, வரும் 7-ம் தேதி வரை காலம் உள்ளது என்றார். மேலும் தேர்தல் அதிகாரியிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், போலி அடையாள அட்டை தயாரித்து அதன் மூலமாக வாக்கு சாவடியை கைப்பற்றுதல், சூறையாடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் வகையில், நம்ப தகுந்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், அரசு இயந்திரத்தை மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலே. பணம் என்பது மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் சாலை வசதி, மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்யவேண்டும் துறைகளுக்கு நிதி ஒதுக்கி துறைகளை வளர்க்கவேண்டும். ஆனால் அதனைச் செய்வதை விட்டுவிட்டு நம்முடைய வரிப் பணம் எதற்காகச் செலவாகிறது என்றால் முழுக்க முழுக்க சமூக வலைத்தளத்தில் ஏதாவது கருத்து போட்டால் அவர்களைக் கைது செய்வது. அவர் விடுதலை பெற்றுவிட்டால் மேல் முறையீடு செய்வது. அதே போல இன்றைக்கு ஒரு பொய்வழக்கு போட்டு, என் மீது பொய் வழக்குப் போட்டு ஆனந்தப்பட்டார்கள் என கூறினார்.

இதையும் படிங்க:Budget 2023: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்.. மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details