தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் டெல்லியில் அலைந்து வருகின்றனர் - புகழேந்தி

தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Pugazhendhi
Pugazhendhi

By

Published : Jul 27, 2021, 11:06 PM IST

சென்னை: அண்மையில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்களே தவிர கட்சியைக் காப்பாற்ற அல்ல. அதிமுக மிகவும் மோசமான நிலையில் மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது.

மக்கள் பிரச்னைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும். சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும், பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறேன். சசிகலாவால் தான் இந்தக் காட்சியை காப்பாற்ற முடியும். ஈபிஎஸ் -ஓபிஎஸ்ஸால் கட்சியை காப்பாற்ற முடியாது.

இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் நான், திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும். விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details