சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர் அடித்து ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில், "அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக! வாழ்க! வெல்க!" என்று அச்சிடப்பட்டிருந்தது.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்
திருநெல்வேலி: சசிகலாவின் விடுதலையை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒட்டிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி
இந்நிலையில் சுப்பிரமணிய ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று, சிறையில் இருந்த சசிகலா, இன்று தண்டனை காலம் நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டார். சிறை நடைமுறைகள் நிறைவுற்று, சரியாக 11 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.