தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது - OPS conducted by district secretaries meeting

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது.

ஓபிஎஸ் தலைமையிலான மா.செ.கூட்டம் தொடங்கியது!
ஓபிஎஸ் தலைமையிலான மா.செ.கூட்டம் தொடங்கியது!

By

Published : Dec 21, 2022, 11:28 AM IST

Updated : Dec 21, 2022, 12:21 PM IST

சென்னை: அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

மொத்தாக 88 மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் நியமனம் செய்தார். இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளை வைத்து மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 21) தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு வழக்கு மற்றும் டிச.24ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாள் போன்றவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நிரந்தர ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுக்குழு நடத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்தும், அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க:ஓபிஎஸ் தலைமையில் மா.செ. கூட்டம்.. பொதுக்குழு தேதி அறிவிக்க வாய்ப்பு.?

Last Updated : Dec 21, 2022, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details