சென்னை:வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் 24 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் நாளை (ஜூன் 24) டெல்லியில் குடியரசுத்தலைவர் பதவிக்கு, பாஜக கூட்டணிக்கட்சி சார்பாக திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து 9 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர நாத், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் டெல்லி செல்கின்றனர்.