சென்னை: வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வருகிற புதன், வியாழனில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
கடந்த வாரம் நடத்தப்படவிருந்த ஆலோசனைக் கூட்டம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவால் ரத்து செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை நிலைநிறுத்துவோம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ