ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மீது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு - chennai district news

சென்னை: வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக குழப்பத்தில் உள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேளான் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக குழப்பத்தில் உள்ளது
வேளான் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக குழப்பத்தில் உள்ளது
author img

By

Published : Sep 25, 2020, 8:35 AM IST

சென்னை பூவிருந்தவல்லி அருகே புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூனா ஒப்பந்தம் நாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அம்பேத்கர், மாகத்மா காந்தி ஆகியோரின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியார் பேசுகையில், "வேளாண் சட்ட திருத்த மசோதாவில் அதிமுக குழப்பத்தில் உள்ளது. அதிமுக எம்பிக்கள் அக்கட்சியின் தலைமையின் கீழ் சரியாக செயல்படுகின்றனரா? என்ற சந்தேகம் உள்ளது.

வேளான் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக குழப்பத்தில் உள்ளது

விவசாய சட்ட மசோதாவை ஆராய்ந்துதான் ஆதரவு அளித்தார்களா? இல்லை மத்தியர அசுடன் கூட்டணி என்பதாலேயே ஆதரவு தெரிவித்தார்களா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். வேளாண் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு நன்மையா? தீமையா? என ஆய்வு செய்து முதலமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும்.

அதேபோல் புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
!

ABOUT THE AUTHOR

...view details