உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கி வந்தன. அதிமுக கடந்த 15 மற்றும் 16ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கியது.
விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள அதிமுக தலைமை அறிவுறுத்தல்! - ADMK head information
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால் இந்த பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேயர்கள், நகர் மன்றம் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனால் அதிமுக சார்பில் மேயர், நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பமனு அளித்தவர்கள் வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விருப்பமனு பெற்றதற்கான அசல் ரசீதை நேரில் வந்து கொடுத்து விருப்பமனு கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் காட்டம்