தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று இறுதியாகிறதா அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல்? - கூட்டணி தொகுதி இறுதிப் பட்டியல்

சென்னை: இன்று மாலைக்குள் கூட்டணி தொகுதி இறுதிப் பட்டியல் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AIADMK candidate list finalizing today
AIADMK candidate list finalizing today

By

Published : Mar 10, 2021, 10:32 AM IST

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் தொகுதிப் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நேற்றிரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.

அதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே.மணி , புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ், அதிமுக தலைவர்களோடு தொகுதிகள் இறுதி செய்வது தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, "பாமக போட்டியிடும் தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தது. நாங்கள் கேட்ட தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாளை காலை வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகும்" எனக் கூறினார்.

கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக தலைவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நேற்று விடிய விடிய அதிமுக கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details