தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலந்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - alandur

ஆலந்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வளர்மதி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

ஆலந்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்
ஆலந்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்

By

Published : Mar 15, 2021, 8:12 PM IST

சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிடுகின்றார். அவர் கூட்டணி கட்சியினருடன் வந்து ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு பின்னர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலகர் சாந்தியிடம் வழங்கினார்.

முன்னதாக, வேட்பாளருடன் இருவர்தான் வர வேண்டும் என்று காவல் துறையினர், 100 மீட்டருக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியபோது வளர்மதி, அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல் துறையினர் சமாதானம் செய்து பின்னர் இருவரை மட்டும் அனுமதித்தனர்.

இதில், இறுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த வளர்மதி கூறுகையில், ’’அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும், பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தேர்தல் அறிக்கை வெற்றிக்கு ஒரு அச்சாரமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், நான் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றால், ஏற்கனவே ஆலந்தூர் தொகுதி மக்களுக்கு அவர்கள் கேட்ட கோரிக்கைகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை பணி செய்திருக்கிறேன்.

இந்த முறையும் வெற்றிபெற்றால் பொதுமக்களின் கோரிக்கையைப் பெற்று பல்வேறு சாதனைகளை என்னால் செய்ய முடியும்’’ என்றார்.

இதையும் படிங்க: ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம்... முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details