தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பு! - AIADMK candidate Adirajaram collects votes in Kolathur constituency

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொளத்தூர் தொகுதி  கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பு  அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாக்கு சேகரிப்பு  2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்  Kolathur constituency  AIADMK candidate Adirajaram collects votes in Kolathur constituency  AIADMK candidate Adirajaram collects votes
AIADMK candidate Adirajaram collects votes in Kolathur constituency

By

Published : Mar 16, 2021, 8:56 AM IST

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணும் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், வேட்பாளர்களாக அறிவிக்கபட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஆதிராஜாரம் களம் காண்கிறார்.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாரம் தொண்டர்களுடன் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்கும்படி கோரினார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம்

கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள்தான் எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது' - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details