சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகத்தில் நாளை (ஜனவரி 21) அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது ஈரோடு கிழக்கில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வியை தழுவியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவே போட்டியிட விரும்புவதாக தாமாகவிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விருப்பத்தை ஏற்று இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்தார்.
இதனிடையே பாஜக இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்த மறுநாளே 14 பேர் கொண்ட தேர்தல் குழு அமைத்தது. இதனால் பாஜக தனித்து போட்டியிட தயாராகி விட்டதாக கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் குழு அமைத்தது என்பது பாஜகவில் நடைமுறைகளில் உள்ள வழக்கம்.