தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி அதிமுக பந்த்.. பொதுமக்கள் கடும் அவதி!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

a
a

By

Published : Dec 28, 2022, 9:40 AM IST

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதலமைச்சர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக பேசினார். இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் புதுச்சேரியில் சூடுபிடித்தது. சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் சமூக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு (Bandh) போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இந்த பந்த் போராட்டத்துக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. புத்தாண்டு கொண்டாட்ட காலம் என்பதால் வியாபாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.

வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, வியாபார வர்த்தக சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பந்த் போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது.

இதனிடையே பந்த் அறிவித்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். பந்த் காரணமாக புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட எந்த பகுதிக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, அரசு பேருந்துகள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:கிளை தலைவர் வீட்டில் தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

ABOUT THE AUTHOR

...view details