தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏப்ரல் 7ஆம் தேதி அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுகவின் தலைமை கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 1, 2023, 10:40 PM IST

சென்னை:அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தலைமையில் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவின் ஒற்றை தலைமை யுத்தத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தோற்கடித்து எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார்.

கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்காததால் எடப்பாடி பழனிசாமி மார்ச் 28 ஆம் தேதி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்றைய தினமே புதிய உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்ப படிவம் அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று கூறிய ஒரு நீதிபதி கொண்ட அமர்வை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது தரப்பினர் சமர்ப்பித்து உள்ளனர். மேலும், பொதுக்குழுவையும் கூட்டி பொதுச்செயலாளர் தேர்வு தீர்மானத்தை நிறைவேற்றம் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அங்குள்ள பாஜக தலைவர்களிடம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து பெற இருக்கிறார். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி தலைமை கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வாகி முதல் ஆலோசனை கூட்டம் என்பதால் பல்வேறு விவகாரங்களை விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில், குறிப்பாக ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்து அதிமுகவின் உறுப்பினர் அட்டைக்கு பதிலாக புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

புதிய உறுப்பினர் அட்டையில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம் பெறும் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை எதிர்கொள்வது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்பட்ட உள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரால் தென் மாவட்டங்களில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது. பொதுச்செயலாளர் பதவியை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் - நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் சூப்பர் அறிவிப்புகள்

ABOUT THE AUTHOR

...view details