தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசில் அதிமுக முறைகேடு - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு - தேர்தல் பரப்புரையில் பொங்கல் பரிசு அறிவித்த முதலமைச்சர்

சென்னை: அரசு வழங்க கூடிய 2ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசில் அதிமுகவினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

dmk rs bharathi
dmk rs bharathi

By

Published : Dec 28, 2020, 5:20 PM IST

பொங்கல் பண்டிகைக்காக அரசு வழங்க கூடிய 2ஆயிரத்து 500 ரூபாய் நிதியை அதிமுக வழங்குவது போல் அதிமுக தொண்டர்கள் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபடுவதை கண்டித்து, திமுக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகையான 2 ஆயிரத்து 500 ரூபாயை அதிமுக கட்சி நிதி போல் அதிமுகவினர் பொங்கல் பரிசை வழங்கி வருகின்றனர்.

தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்து விதி மீறலில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயகுமார் தங்களது தொகுதியில் அவர்களுடைய பெயரை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு வழங்குவது போல், அரசுடைய கஜானாவை அதிமுக தேர்தல் பரப்புரை நிதியாக வழங்குகிறது.

அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசில் அதிமுக முறைகேடு

இதுகுறித்து தலைமை தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிடில் பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் அதிமுக தேர்தல் நிதியாக கொடுப்பது குறித்து சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார்.

இதையும் படிங்க:உதயசூரியன் பெயரில் திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாரா - செல்லூர் ராஜூ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details