இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"விவசாயப் பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை. கோடை சாகுபடியில் நெல், பருப்பு வகைகள், எள் சாகுடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். விவசாயப் பணி தடையின்றி நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவடை இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் கடைகளைக்கூட திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் போதிய உரம் கையிருப்பில் உள்ளது. தேவையான அளவுக்கு விதைகள் கைவசம் உள்ளன. விவசாயப் பணிகள் செய்ய எந்த தடையும் இல்லை. சமூக இடைவெளியைக் கடைபிடித்து விவசாயிகள் தங்கள் பணியைத் தொடரலாம்.
தங்களது வேலையைத் தொடர தடை இருந்தால் மாவட்ட உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். சேதமடைவதற்கு முன் காய்கள், பழங்களை கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு அரசின் குளிர் பதன கிடங்குகளில் விவசாயிகள் தங்களது பொருள்களை இலவசமாக சேமித்துக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.