2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துவருகிறார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு! - வேளாண் துறை தமிழ்நாடு பட்ஜெட்
சென்னை: 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
agriculture allotment in 2020 Tamilnadu
வேளாண் துறைக்கான அறிவிப்புகள் பின்வருமாறு:
- வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- அதேபோல பயிர்க்கடனுக்கு ரூ. 11 ஆயிரம் கோடியும் உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது
- திருநெல்வேலியிலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ரூ. 77.94 கோடி மதிப்பில் மெகா உணவு பூங்கா அமைக்கப்படும்
- திருத்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுப்படுத்தப்படும்
- 11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி நெல் விதைப்பு முறையில் நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்படும்
- வரும் ஆண்டிலும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்இதுமட்டமின்றி பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தாெகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
- ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, ஆயில் ஆகியவை தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்
- உழவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
- விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க உழவர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்2020 - கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!