திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் மூன்று லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர் அவர்கள், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தார்.
தேர்தல் நடத்தாமலே, அரசியல் செல்வாக்கின் காரணமாக, கூட்டுறவு சங்க விதிகளை மீறி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்திக்கு திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தை;ச் சேர்ந்த மணி, சுதாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த தடை உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பதிவாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.