தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த 48 வயது நபர் கைது - சென்னை செய்திகள்

சென்னையில் 18 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட 48 வயதுடைய நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

chennai news  chennai latest news  forcibly marriage  aged man forcibly married a small girl  crime news  child marriage  கட்டாய திருமணம்  சிறுமியை கட்டாய திருமணம் செய்த நபர் கைது  சென்னையில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த நபர் கைது  சென்னை செய்திகள்  சிறுமிக்கு கட்டாய திருமணம்
கட்டாய திருமணம்

By

Published : Sep 22, 2021, 10:23 AM IST

சென்னை: அண்ணா சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திடீரென காணாமல்போனார்.

சிறுமியின் பெற்றோர் அவரைப் பல இடங்களின் தேடியும் கிடைக்காத நிலையில், கடந்த 19ஆம் தேதி அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியைத் தேடிவந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை சந்தை அருகே காவல் துறையினர் சிறுமியைக் கண்டுள்ளனர். அப்போது அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி புதுப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவராம் (48) என்பவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. அவரை சிவராமன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கட்டாயப்படுத்தி சிறுமியை திருமணம் செய்துகொண்டதற்காக, சிவராமை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்

ABOUT THE AUTHOR

...view details