ரயில் எண் 05691: அகர்தலா - கன்னியாகுமரி முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ஒரு வழி சிறப்பு ரயில் மே 19ஆம் தேதியன்று அகர்தலாவிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். மே 22ஆம் தேதியன்று இரவு 10 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
அகர்தலா - கன்னியாகுமரி இடையே ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கம்! - ரயில் சேவைகள்
சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ஒரு வழி சிறப்பு ரயில், அகர்தலா (திரிபுரா) முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும்.
இந்த ரயில் அம்பாசா, தர்மநகர், புதிய கரிம்கஞ்ச், பதர்பூர், நியூ ஹாஃப்லாங், குவஹாத்தி, காமக்யா, கோல்பாரா, புதிய பொங்கைகான், புதிய கூச்பெஹார், மாதபங்கா, ஜல்பைகுரி, புதிய ஜல்பைகுரி, மால்டா டவுன், ராம்பூர்குல், கங்க்பிரக்ட் குர்தா சாலை, பலாசா, விசாகப்பட்டினம், சமல்கோட், விஜயவாடா, ரேனிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், எர்ணாகுளம் டவுன், திருவனந்தபுரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று பயணிக்கும்.
ரயில் சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும் தேதி நேரம் 22.05.2021 அன்று, காலை 08.07 மணி, ஈரோடு - காலை 09.07 மணி, கோவை காலை 10.59 மணி. மேலும் சேலம் வழியாக செல்லும் கோவை - மங்களூரு, சென்னை - மங்களூரு, கோவை - நாகர்கோயில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.