சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த பரவலை தடுக்கும் வகையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் , தற்போது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டை மட்டும் தனிமைப்படுத்திவருகின்றனர்.
ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஜூலை 14ஆம் தேதிவரை 272 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. நேற்று அந்த எண்ணிக்கை 213 ஆக குறைந்துள்ளது. முக்கியமாக, தண்டையார்பேட்டை பகுதியில் 50ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றாக மாறியுள்ளது.
இதன் மண்டலவாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தண்டையார்பேட்டை - 1
திரு.வி.க நகர் - 10