சென்னை:சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் உயர்கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகம் மானிய குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ,
கரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வினை இரண்டு கட்டங்களாக நடத்தியது.
முதல் கட்டத்திற்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்வுகள் நடைபெற்று அதன் விடைத்தாள்கள் தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட சற்று கால தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.