தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில், தமிழ்நாட்டில் இன்றிலிருந்து (செப்டம்பர் 1) ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

Schools opening today in TamilNadu  Schools opening  school reopen  today schools and collages reopen  tamilnadu schools and collages  after long time schools and collages reopens today in tamilnadu  பள்ளிகள் திறப்பு  நீண்ட நாள்கள் கழித்து பள்ளிகள் திறப்பு  பள்ளி கல்லூரிகள் திறப்பு
school reopen

By

Published : Sep 1, 2021, 7:02 AM IST

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது கரோனா பெருந்தொற்று. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு எனப் பல்வேறு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கரோனா சற்று குறைந்துவருகிறது.

மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள்...

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடந்துவந்த நிலையில், தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் இன்றுமுதல் (செப். 1) செயல்பட உள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி வாசத்தை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர்.

மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், அங்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ள வகுப்பறைகள்

மேலும் பள்ளி வகுப்பறைகள், பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், பள்ளியில் உள்ள மேசை, நாற்காலிகள் என அனைத்தையும் பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டுவந்த தடுப்பூசி மையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதையும் படிங்க: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணையும் ஜெயலலிதா பல்கலைக்கழகம்

ABOUT THE AUTHOR

...view details