சென்னை:தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் சாய் சுதர்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சாய் சுதர்சன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஐபிஎல் 2023 சென்னை உடனான இறுதிப் போட்டியில் குஜராத் அணிதான் வெல்லும் என நினைத்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பலத்துடன் மீண்டு வருவோம். தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை எனக் கூறிய சாய் சுதர்சன், “சிறிய வயதில் இருந்து தான் சென்னை கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்துள்ளதாகவும், சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். ஆனால் என்னை குஜராத் அணி தான் தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது எனவே தற்போது அதுதான் தனது அணி” என கூறினார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படுவோருக்காக அவர் கூறிய அறிவுரையில், “நான் இந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு என் பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கமளித்தது தான் காரணம். மேலும் என் கடின பயிற்சியும், உழைப்பும் தான் என் வெற்றிக்கு காரணமாக உள்ளது.