இந்தியா பத்து ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாகத் திகழ்ந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாடு 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், தெற்கு ஆசியா போலியோ இல்லாத பகுதியாக 2014 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
போலியோ இல்லா தமிழ்நாடு
இருப்பினும் உலகம் முழுவதும் போலியோ பாதிப்பு தொடர்ந்து இருந்தே வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் வழியாக போலியோ நோய் இந்தியாவில் பரவ அதிக வாய்ப்புள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, போலியோ தொற்று நோய் உள்ள நாடுகள், போலியோ மீண்டும் பரவும் நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு அனைத்து இடங்களிலும் போலியோ தடுப்பு மருந்து செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.